
உயிரே...!!!
உனை நினைத்தேன்...
உயிர் துடித்தேன்
உலகில் ஆயிரம்
பேருண்டு - ஆனால்
உனைப்போல்
யாரும் இல்லை ...!!!
உறவுகள் பல
சுற்றிவரினும்
உன்மீது நான்
கொண்டது
காதலா???
நட்பா???
புரியவில்லை எனக்கு !!!
நீ உனது
காதலை என்னிடம்
மறைமுகமாக
நீ சொன்ன போது
உன்னை முதலில்
எனக்கு பிடிக்கவில்லை ...
காரணம் உன் அழகு
போதாது என்பதால்
அல்ல... !!!
ஆனால் இன்று
உன் அன்பு என்னை
ஈர்ந்து விட்டது ...!!!
எனவே உனது
அன்பை மறக்க
முடியாது -தினம்
உருக்குலைந்து
போகிறது
என் இதயம் ....!!!!
உயிரே உன்னை
சந்திக்கும் போது
பிரிவு ஏற்படுமென
நான் உணரவே இல்லை
உன்னை பிரிந்ததனால்
என் மனம் தவிக்கிறது....
உனை தினம் எதிர்
பார்த்து அந்த நாளுக்காக
உன் உறவு காத்திருக்கிறது ...
என்றோ ஒருநாள்
உறவு எதுவானாலும்
உன்னையும் என்னையும்
இணைக்கும் உறவு
அந்த ஆண்டவனுக்கு
மட்டுமே புரியும்...
உயிர் உள்ளவரை
தொடரட்டும் எம்
உறவுப்பாலம்
இப்பூமி மீது.. .. !!!
3 comments:
என்றோ ஒருநாள்
உறவு எதுவானாலும்
உன்னையும் என்னையும்
இணைக்கும் உறவு
அந்த ஆண்டவனுக்கு
மட்டுமே புரியும்
உயிருள்ளவரை
தொடரட்டும்
எம் உறவுப்பாலம்
இப்பூமி மீது ..
உங்கள் விருப்பம் போலவே நடந்திட வாழ்த்திடும் ,..
இனிய தோழன் விஷ்ணு
நன்றி விஷ்ணு
அன்புடன் நந்தா
Ungal kavithaigal migavum nanraga ullathu. Ini naan ungal rasigan...
Post a Comment