
என் இதயச் சுமையை
இறக்கி வைக்க இடமில்லை ...
சொல்லி அழுது விட்டால்
துயரமெல்லாம் தீர்ந்து விடும்
சொல்லவொரு உறவும் இல்லை ...
சொல்வதற்கும் வார்த்தையில்லை ...
தனியே படுத்தழுது
தலையணை நனைப்பதன்றி
வேறு எதுவும் இல்லை
என் நம்பிக்கையின் சிகரமாய்
என்னை நேசிக்கும்
உறவு ஒன்றை தேடுகிறேன்
வழி ஒன்று காணவில்லை ...
ஆற்றும் வழி தேடுகிறேன்
ஆறவில்லை தேறவில்லை ...
என் மனது !!!
இறக்கி வைக்க இடமில்லை ...
சொல்லி அழுது விட்டால்
துயரமெல்லாம் தீர்ந்து விடும்
சொல்லவொரு உறவும் இல்லை ...
சொல்வதற்கும் வார்த்தையில்லை ...
தனியே படுத்தழுது
தலையணை நனைப்பதன்றி
வேறு எதுவும் இல்லை
என் நம்பிக்கையின் சிகரமாய்
என்னை நேசிக்கும்
உறவு ஒன்றை தேடுகிறேன்
வழி ஒன்று காணவில்லை ...
ஆற்றும் வழி தேடுகிறேன்
ஆறவில்லை தேறவில்லை ...
என் மனது !!!
4 comments:
உனக்கு வழி காட்ட நண்பன் என்ற இந்த உறவு உண்டு ...
என்றும் அன்புடன்
ஓவி
மிக்க நன்றி ஒவியனே!!!
உங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றிகள் பல ...
என்றும் அன்புடன்
நந்தா
இதயமது விழியாகி
உதிரமது நீராகி
வழிகிறதே அருவியாக ..
இதயத்தின் சுமையதனை
இறக்கி விடு என் தோழி ..
தோள் சாய கண் துடைக்க
தோழனாக நானிருக்க ..
அழைக்கும் முன்னே ஓடிவரும்
அன்பு நட்பை மறந்தாயோ ?..
ஏனிந்த கலக்கம் தோழி
என் மனமும் கலங்கிடுதே..
காலமது கனிந்து வரும்
கவலை விடு என்தோழி ..
என்றும்
அன்புடன்
இனிய தோழனாக
விஷ்ணு ...
" நீ மட்டும் நிஜமானால் ,... நான் என்றும் நிழலாவேன் "
www.vishnu-vichu.blogspot.com
www.vichu-vishnu.blogspot.com
காலமது கனிந்து வரும்
என்ற நம்பிக்கையில் தான் இந்த நிமிடம் வரை ...
மிக அருமையான வரிகளுடன்
என் மனச் சுமையை இறக்கி விட்டீர்கள்
நன்றி தோழனே
என்றும் அன்புடன்
நந்தா
Post a Comment