23/02/2010

உன் கல்லறை(யருகில்)


அறியாத வயது ..புரியாத பருவம்
காதலின் அர்த்தம் புரியா சிறு சிசு
உன் கண்கள் பேசிய..
உன் உதடுகள் சொன்ன...
காதல் மொழி தெரிய வில்லை ...!!

அன்னையே என் உலகம் ஆனதால்
அவர் சொல்லை மீறவில்லை
பெரியோரின் தவறுக்கு சிறு பிள்ளை
எனக்கு தண்டனை கொடுத்து விட்டாய் ..
விளையாட்டு பிள்ளை போல அன்று ..
இன்று விதி விளையாட்டின் கை பொம்மை நான்

நீங்காத உன் நினைவுகள் ...
சுட்டெரிக்கும் பல இரவுகள்
இவைகளுக்கிடையே என் இதய விம்மல்கள்
உன் நினைவுகள் தூண்டும் ஒவ்வொரு
கண பொழுதும் என் வாழ்வில் மரண காயங்களே ..
உன்னை மறக்கும் கணமே
மரணம் என் கை சேரட்டும் ..!!!

நீ என்னோடு வாழ நினைத்த போது
வாழ்க்கை என் கையில் இல்லை ..
நான் உன்னோடு வாழ நினைத்த போது
நீ என்னோடு இல்லை ..
என்னை நீ தேடிய போது நான் உன்னருகில்
உன்னை நான் தேடுகிறேன் நீயோ கல்லறையில்

வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே ..
இல்லையே மண்ணோடு என்றாய் ..
சொன்னதை செய்து முடித்த புனிதன் நீஆனாய்
உன்னருகில் வாழத்தான் எனக்கு வாய்ப்பில்லை
உன் கல்லறை அருகில் உறங்கயேனும்
இடம் கொடுத்து விடு..!!

13/12/2008

இது என்ன வாழ்க்கை..
இது என்ன வாழ்க்கை
என்ன தவம் செய்து பிறந்து விட்டேன் ...
நின்மதி இழந்து நிதமும் நான் தவிக்கிறேன் ..
உள்ளதை உள்ளபடி
உண்மைகளையும்
சொல்ல முடியவில்லை
பேச மொழி தெரிந்தும்
உண்மைகள் என் பக்கம் இருந்தும்
சொல்ல மொழி தெரியவில்லை ..
என் வாழ்வில் ஏக்கம்...
வெறுப்பு ...கவலை ....
விரக்கதி ....
வேதனை நிறைந்து வழிகின்றன ...
சொல்ல ஒரு உறவும் இல்லை
சொல்லி அழ வழியும் இல்லை ..
என்ன தவம் செய்து பிறந்து விட்டேன் ...
ஒ தெய்வமே ...
எல்லாம் கொடுத்தாயே
அழகு ..அறிவையும் கொடுத்தாய்
ஆனால்
அழகானவாழ்வை கொடுக்க மறந்தது ஏன்..
இவை இரண்டயும்
ஏன் என் உயிரையும்
சேர்த்து நீயே எடுத்துகொள்..

அன்பே கொள்ளாதே ..


நெஞ்சில் வலியெடுத்துத்
துடிக்கின்றேன்
காரணம்
உன் அறியாமையை கண்டு...
என்னை அறியாமல்
என் மனதை வருடியது நீ
ஆனால் உன் சொல் என்னும்
அம்புகளால் என்னை கொள்ள்கிறாய் ...
சொல் அம்புகளால்
நெஞ்சை துளைத்து விட்டு ....
வலிக்கிறதா என்று கேட்கின்றாய்
வேதனையாக இருக்கிறது
ஏற்கனவே ரணமாகிப்போன
என் இதயமதில் உன் சொல்
அம்புதனை வீசி விட்டு
இரகசியமாக என் வேதனையை ரசிக்கின்றாய் ....
இப்படி நீ என்னை தண்டிப்பது நியாயமா ???
ஏன் புரிந்தும் புரியாதவனாய் ... நீ ??

உன் நினைவுகளுடன்


பிரிவுகள்
தான் காதலின்
தண்டனையா ..???
காதல்
தோல்வியே
என்றும்வேதனையா..???

நானும் ....
இதய கதவை
தட்டி பார்த்தேன்
அவன் இறுக்கி
பூட்டி கொண்டான்..
திறக்க நானும்
நினைத்த போது
திகைத்து நின்றேன் ...

நாயகியாகிய ...
நான் வரும்
முன் நாடகமும்
முடிந்தது ..
இது தான் காதல்
காவியமா ...???

என் ஓவியம்
எழும் முன்
தூரிகையும்
உடைந்தது இது
தான் நியாயமா ...???

நிலவும் உதித்தது
பொழுதுகளும் விடிந்தது ...
என் வாழ்வு ஏனோ
இருண்டதாய் இன்றும்
உன் நினைவுகளுடன்

நான் ....


காதல் தேடி
வாழ்ந்தேன்
அன்று ...
அது கையில்
கூடி வந்த நேரத்தில்
பாக்க சென்றேன்
நான் பாக்கும்
முன் எத்தனையோ
லீலைகள்...????

காதல் செடியும்
வளர்த்தேன் அன்று
ஆனால்
பூ பூப்பதையும்
பாக்கவில்லை ...!!!
நான் ....
காதல் வரத்தை மட்டுமே
கேட்டுப் பார்த்தேன்
அவனோ
கொடுக்கவே இல்லை ..
காரணம் கேட்டேன் ..
காலம் சொல்லும்
என்றான்....
உணர்ந்தேன் நானும்

காளை முகத்தை
கடைசி வரை
நானும்
பாக்கவே இல்லை ...
இருந்த போது
ஏற்க்க மறுத்தான்
அது தான் அவன்
பிடிவாதம் ...
அவன் பிரிந்த போது
நான் பாக்க துடித்தேன்....
ஐயோ கொடுமைகள்

காதலித்து பார்


காதலித்து பார்
கண்ணீர் வரும்
இரவும் பகலாகும்
காதலிலே
தோத்து பார்
உன் நிழலும்
உன்னை வெறுக்கும்..

காதலித்து பார்
உன் காதலையும்
கொடுத்து பார்
உன் உயிரையும்
எடுத்து விடும் ...

காதலித்து பார்
காதலித்து காயம்
கண்டால் அது
என்றும்
வலிப்பது இல்லை ..

எம் காதலும்
காதலின் ஏக்கமும்
கல்லறை
வரை மட்டுமே ...

காதலின் புதை
குழியில் தெரிந்தே
புதைந்தேன்...

15/07/2008

என் வாழ்க்கை


வாழ பிடிக்காத
தேசம்மொன்றில்
வாழ்கையை ....
இனியும் எப்படி
நினைப்பது !!

மரணத்தின்
நந்தவனதிக்குள் ...
மதியிழந்து
வாழ்க்கைக்கு ...
குட் பாய் [good bye]சொல்ல
சம்மதித்த பின் ....

உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்து ...
கனவுகள் நிறைந்த
வசந்த தேசத்துக்குள்
வாழ்வது தெப்படியோ ????

நான்


விழியில் நனைந்து
இதயம் கரைந்து
இன்னலுக்கு மத்தியில்
இவ் வாழ்க்கையை கடக்கிறேன் .....

இரண்டு கண்களில்
காட்சி தோன்ற
இதயமோ வேதனைகளைச்
சுமந்த வண்ணம்
துக்க்கமின்றி துவண்டு
கனவுலகில் மிதக்கிறேன் ....

நெஞ்சத்தின் நெருடல்களை
நீண்ட நாட்களுக்குப் பின்பு
மீட்டிப் பாக்கின்றேன்
காயப்பட்ட நெஞ்சம்
கருகிப் போய் ஜடமாய்
உறங்குகின்றது ...!!!

கவலை மறந்து
தூக்கத்தை கொடுக்க
இதயத்தை அழைக்கிறேன்
அதுவும் உணர்வுகள்
இன்றி நடைப்பினமாய்
வேதனைகளை சுமக்கிறது ....

இப்படி ஒரு சோதனை
தேவை தானா எனக்கு ???
சொல்..........நெஞ்சமே .....சொல்
நீயும் என்னுடன் இணைந்து
மௌனத்தால் கொல்லாமல்
என் மேல் தயவு காட்டி
சொல் .............

ஞாபகங்கள் கவிதையாய்
உட்தெடுக்க
கன்னியவள் கண்
கலங்குகிறேன்
உன் வார்த்தைக்காக ...

14/07/2008

அது ஒரு பொற்காலம்


கல்லூரி செல்லும்
ஒவ்வொரு
காலை வேளையும்
இன்பங்கள் பொங்கியெழும்
கனவுகள் நிறைந்திருந்த
அதுவொரு பொற்காலம் .....
இதயத்தின் எந்த
மூலையில்
புதையுண்டு போனதோ ???
விம்மிப் புடைந்தநெஞ்சுக்குள்
அத்தனையும் துயரச் சுமைகள் தான் ..!!!

15/03/2008

உன் உறவு தான் என்ன ???


உயிரே...!!!
உனை நினைத்தேன்...
உயிர் துடித்தேன்
உலகில் ஆயிரம்
பேருண்டு - ஆனால்
உனைப்போல்
யாரும் இல்லை ...!!!

உறவுகள் பல
சுற்றிவரினும்
உன்மீது நான்
கொண்டது
காதலா???
நட்பா???
புரியவில்லை எனக்கு !!!

நீ உனது
காதலை என்னிடம்
மறைமுகமாக
நீ சொன்ன போது
உன்னை முதலில்
எனக்கு பிடிக்கவில்லை ...

காரணம் உன் அழகு
போதாது என்பதால்
அல்ல... !!!
ஆனால் இன்று
உன் அன்பு என்னை
ஈர்ந்து விட்டது ...!!!

எனவே உனது
அன்பை மறக்க
முடியாது -தினம்
உருக்குலைந்து
போகிறது
என் இதயம் ....!!!!

உயிரே உன்னை
சந்திக்கும் போது
பிரிவு ஏற்படுமென
நான் உணரவே இல்லை
உன்னை பிரிந்ததனால்
என் மனம் தவிக்கிறது....

உனை தினம் எதிர்
பார்த்து அந்த நாளுக்காக
உன் உறவு காத்திருக்கிறது ...

என்றோ ஒருநாள்
உறவு எதுவானாலும்
உன்னையும் என்னையும்
இணைக்கும் உறவு
அந்த ஆண்டவனுக்கு
மட்டுமே புரியும்...

உயிர் உள்ளவரை
தொடரட்டும் எம்
உறவுப்பாலம்
இப்பூமி மீது.. .. !!!


08/03/2008

இதயச் சுமை


என் இதயச் சுமையை
இறக்கி வைக்க இடமில்லை ...

சொல்லி அழுது விட்டால்
துயரமெல்லாம் தீர்ந்து விடும்

சொல்லவொரு உறவும் இல்லை ...
சொல்வதற்கும் வார்த்தையில்லை ...
தனியே படுத்தழுது
தலையணை நனைப்பதன்றி
வேறு எதுவும் இல்லை

என் நம்பிக்கையின் சிகரமாய்
என்னை நேசிக்கும்
உறவு ஒன்றை தேடுகிறேன்
வழி ஒன்று காணவில்லை ...

ஆற்றும் வழி தேடுகிறேன்
ஆறவில்லை தேறவில்லை ...
என் மனது !!!

கருத்த வானம் தான் நான்...!


கருத்த வானம்
மழை பொலியும்...
கருத்த என் வாழ்வில்
தூறல்கள் இல்லை...

சில்லென்று வரும் தென்றலும்
கொதிப்பாகவே இருக்கும் ...
பூவாகத்தான் இருந்தேன்
இன்று அனலாய் கொதிக்கின்றேன் ...

தட்டி கழித்த சமுதாயம்
எட்டி உதைத்த உறவுகள்
அழுத்திய காலங்கள்
கருத்த வானம் தான் நான்
ஆனால் தூறல்கள் இல்லை ...

வாழ்க்கை பற்றிய
நம்பிக்கையில்லை - ஆனால்
வேதனையின் பாரமும்
சோகத்தின் சுமையும்
மனதை வெறுமையாக்கும்
சம்பவமும் உண்டு ...

கருத்த வானம் தான் நான்
ஆனால் ...
தூறல்கள் இல்லை !!!

13/01/2008

பிரிவு
நீ என்னை விட்டுப் பிரிந்தாய் இன்று
அதனால் எனக்கு எதிலுமே பிரியமில்லை
உலகத்தில் நான் விரும்பியவையில்
முதல்மையானது உன் நட்பு..

ஏன் உன் பாசம் பாதியிலே
பறிபோகும் என்பதாலா ???
ஏன் என் மனதிற்கு புரியவில்லை
உன் பாசம் பாதியிலே
போவது தெரிந்து இருந்தால்
உனக்கு முன் பாவி நான் மாறியிருப்பேன்...

அன்பு காட்டியவர்கள் எல்லாம்
என்னை விட்டுப் பிரிந்த போதும்
நீ மட்டும் பிரியாமல் இருந்தாய் ...
அது நிரந்தர பிரிவுக்கு
அஸ்திவாரம் என்பதை அறியாமல் - இன்று
நிம்மதியின்றி நிமிடங்கள் கரைகிறது ...

உன்னை பிரிவதை நினைத்து
இன்றும் நான் அழுகிறேன்
நீயோ அழ வைத்து வேடிக்கை பார்க்கிறாய்
நான் சுத்தமாக சுவாசித்தது உன்னையும் - உன்
நினைவுகளையும் மட்டும் - ஏன்
மீண்டும் மீண்டும் விட்டுச் செல்கிறாய் .........???

12/01/2008

தவிப்பு
எத்தனையோ கனவுகள் எனக்குள்..
அத்தனையும் சுக்கு நூராகி
பித்தாக என்னை அலைய வைத்து
ஏன் பிரிந்து சென்றாய் என்னை விட்டு...???

தூக்கத்தை பகிர்ந்து கொள்ள நீயில்லா தனிமையில்...
ஆறுதல் சொல்ல ஆளின்றி ...
நானிங்கே தவிக்கிறேன் ...
ஆழமான என் காதலையும்
உன்னடிமையாகி போன என்னையும்
உன்னால் எப்படித்தான் மறக்க முடிந்தது ...???

அடிக்கடி காதல் மொழி பேசிய நம்
கையடக்கத் தொலை பேசிகள் -இன்று
நம்மைப் போலவே மௌனமாகிப் போயின ...!!!

உன் நினைவுகளால் நிறைந்திருந்த
என் நெஞ்சம் மட்டும் இன்று
பிரிவின் வேதனையில்
பரிதாபமாய் தவிக்கிறேன் ...!!!

உன்னருகாமையின்றி இனிமேல்
எப்படித்தான் வாழப் போகிறேனோ ???
இதயம் முன்னிலும் இருளாகிப் போனது
என்றுமே அனுபவித்திராத வேதனை மட்டும்
எனக்குள் இன்று நிரந்தரமாகிப் போனது ...!!!

இருந்த போதும் ....
உன் நினைவுகள் தரும்
வேதனைகளில் வெந்தபடியே..
இன்று நான் வாழ்கிறேன் ....!!! NY

28/12/2007

வேதனையின் விளிம்பில் நான் !!!


சிதைந்து போன...
உள்ளத்துஉணர்வுகளை
எல்லாம்சேர்த்து வைத்து
வேதனையின் விளிம்பில்-
நான்எழுதும் கவிதை இது ,...
பருவ வயது முதலே -இன்று
வரைதொடரும் அவலம் இது
கவலையே வாழ்வாக
கண்ணிரீ கதையாக -கொண்ட
என் உருக்குலைந்த
உள்ளத்தில் இருந்து-கிளர்ந்து எழும்பும்
உஷ்ண உணர்வு இது ..
அன்பும் - பண்பும் கொண்ட
நாயகன் வருவான் என ...!
உள்ளம் முழுக்க
எண்ணம் வளர்த்து ...
கனவுகளுடன் வாழ்ந்த
என் வாழ்வில் ....
அகம் பாவம் , ஆணாதிக்கம்...
சந்தேகம்கொண்ட ஒருவன்...
அதிரடியாய் பிரவேசிது
என் கனவுகளை கலைத்து...
உணர்வுகளை கொன்று
கேவலப்படுத்தி உள்ளத்தை
உருக்குலைத்து...!!!
ஊமையாய் அழ வைத்து
என்னை ஜடமக்கியதால்...!
நடை பிணமாய் நானும் -இன்று
நடமாடுகிறேன் ...!!!


17/12/2007


நாட்களும் வருடங்களும்
நகர்ந்து கொண்டு செல்கிறது -ஆனால்
நானோ ????

நடைப் பிணம் போல்
அலைந்து திரிகின்றேன் !!!

இவ் விடியலை நோக்கி
விடியும் நாள்
விடிவுக்குரிய நாளாகாது-என்று
எண்ணுகின்ற நாட்களெல்லாம்
ஏமாத்தம் என் வாழ்வில் !!!

என்று வசந்த காலம் துளிர் விடும்
அந்த நாளுக்காக...
காத்திருக்கும் காலங்கள்

கனவாகுமா ?????
நனவாகுமா ............என்று?
காலம்....... தான் பதில் சொல்லும்!!!....
Ny

13/12/2007


எதற்காக .....அன்பே !!!

என்னை கண்ணீரில்
கரைய வைத்து
கருனையற்றவனாய்
நீ சென்றாய்..???

சாம்பிராணி புகைபோல
பொங்கியெழும்
உன் ஞாபகங்கள் தான்
என் சிந்தை கலங்க வைக்கிறது!!!

நீயென் இதயத்தை
புரிந்து கொள்ளும் போது
நானிருப்பேன்..
புதைகுழிக்குள்..!!!

எழுதுகிறேன் ஒரு கவி


எழுதுகிறேன் ஒரு கவி
எனக்காக அல்ல !!!

உன்னால் என் மனதில்
ஏற்ப்பட்ட காயத்தை சுட்டிட...

உன்னை நினைத்த அந்நாளில்
உள்ளத்தை தொலைத்தேன்
அன்பு கொண்ட இதயத்தினை பணம் மறுக்கும்
என்பதை உணர்ந்து கொண்டேன்!!!

இந்த ஏழைக்கு எட்டாது என்று
என் மனதை மாற்றிட முயன்றேன்
ஆனால் இதயமோ அடம்பிடிக்கிறது
உன்னால் என்றுமே மறைந்து போகா
வடுக்கல் என்னைச் சூழ...

உயிரான அன்பு உருக்குலைந்தாலும்
என் உயிர் வாழும் வரை உன் நினைவுகள்
உள்ளதை விட்டகலாது!!!!

மறு ஜென்மம் மானிடராய்...
செல்வத்துடன்
பிறந்து விட்டால்
உன் அன்பை
பணம் கொடுத்து வாங்குவேன்.!!!