15/07/2008

நான்


விழியில் நனைந்து
இதயம் கரைந்து
இன்னலுக்கு மத்தியில்
இவ் வாழ்க்கையை கடக்கிறேன் .....

இரண்டு கண்களில்
காட்சி தோன்ற
இதயமோ வேதனைகளைச்
சுமந்த வண்ணம்
துக்க்கமின்றி துவண்டு
கனவுலகில் மிதக்கிறேன் ....

நெஞ்சத்தின் நெருடல்களை
நீண்ட நாட்களுக்குப் பின்பு
மீட்டிப் பாக்கின்றேன்
காயப்பட்ட நெஞ்சம்
கருகிப் போய் ஜடமாய்
உறங்குகின்றது ...!!!

கவலை மறந்து
தூக்கத்தை கொடுக்க
இதயத்தை அழைக்கிறேன்
அதுவும் உணர்வுகள்
இன்றி நடைப்பினமாய்
வேதனைகளை சுமக்கிறது ....

இப்படி ஒரு சோதனை
தேவை தானா எனக்கு ???
சொல்..........நெஞ்சமே .....சொல்
நீயும் என்னுடன் இணைந்து
மௌனத்தால் கொல்லாமல்
என் மேல் தயவு காட்டி
சொல் .............

ஞாபகங்கள் கவிதையாய்
உட்தெடுக்க
கன்னியவள் கண்
கலங்குகிறேன்
உன் வார்த்தைக்காக ...

2 comments:

Vishnu... said...

நெஞ்சத்தோடு
உன் கேள்விகள்
என் மனதை
நெருடச்செய்கிறது நந்தா

மௌனமே
மொழியாக
உன் நெஞ்சம்
என்றுமே இருக்காது

இருண்ட நாட்கள்
மட்டுமே
உன் வாழ்வில்
இயற்கையாகாது ...

விடியல்கள்
உன் வாழ்விலும்
வெகுவிரைவில்
வருமென
இவ்வுயிர் தோழனின்
உள்மனமும் சொல்கிறதே ,..


என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ,..

இனியவள் said...

ஆமாம், நானும் அதையே வேண்டிக்கொள்கிறேன்!